முபாசாவிடம் அடி வாங்கிய வெற்றிமாறன், விடுதலை 2 பரிதாபங்கள்

Box office Viduthalai Part 2
By Tony Dec 26, 2024 03:30 AM GMT
Report

விடுதலை 2 வசூல்

 விடுதலை 2 வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் விடுதலை 2 படம் உலகம் முழுவதும் ரூ 42 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. ஆனால், இந்த வசூல் அனைத்துமே முதல் மூன்று நாட்களில் வந்தது தானாம்.

முபாசாவிடம் அடி வாங்கிய வெற்றிமாறன், விடுதலை 2 பரிதாபங்கள் | Viduthalai 2 Box Office Collection

விடுதலை 2 வார நாட்களில் வசூல் குறைந்தே வந்தது, அதிலும் நேற்றும் விடுமுறை நாளான கிறிஸ்துமஸ் அன்று தமிழகத்தில் முபாசா ஹாலிவுட் படத்தை விட விடுதலை 2 படத்தின் வசூல் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் விடுதலை 2 படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு பெரிய வசூல் வர வாய்ப்பில்லை, ரூ 55 கோடி வரை தான் இப்படத்தின் மொத்த வசூலே இருக்கும் என கூறப்படுகின்றது.