அவனைவிட இவன் மோசம்! ராஜுவை அசிங்கப்படுத்திய நிரூப்.. விளாசும் ரசிகர்கள்..
பிக் பாஸ் 5சீசன் 90 நாட்களுக்கும் மேலாக சென்று இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இறுதி போட்டிக்காக கடும் போட்டி நிலவும் நிலையில் நேற்று சஞ்சீவ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
நேற்று கமல் நிரூப்பிடம் யார் இறுதி போட்டிக்கு தகுதியானவர் இல்லை என்று கேட்டுள்ளார். அதற்கு நிரூப், ராஜு என கூறி, அவருக்கு காமெடி செயது சிரிக்க வைக்கும் திறமை உள்ளது. ஆனால் பைனலுக்கு தகுதியானவர் இல்லை என்று பகிரங்கமாக தெரிவித்தார்.
மேலும் அபிஷேக் நல்ல போட்டியாளர். நான் அவரை ஒரு கடுமையான போட்டியாளராக பார்த்தேன். அவர் பயன்படுத்தும் உத்தி மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்று கூறுகிறார்.
அவர் கூறுவதை மிகவும் உன்னிப்பாக கேட்டுக் கொண்டே வந்த ஆண்டவர் அவரிடம் அபிஷேக்கும் நிறைய காமெடி பண்ணுவாரே என்று கேட்கிறார். இவ்வாறு அந்த ப்ரோமோ முடிகிறது. ராஜு ஒவ்வொரு வாரமும் நாமினேட் ஆகும் போது முதல் ஆளாக சேவ் செய்யப்படுவார். அப்படி இருக்கையில் ஒரு பொறாமை அடிப்படையில் நிரூப் கூறியது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.