கீர்த்தி சுரேஷை ஓரங்கட்ட பார்த்தாங்க!! பல உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்.
அதனை தொடர்ந்து, முன்னணி நடிகர்களுடன் குறுகிய காலக்கட்டத்தில் நடித்தும் தேசிய விருதினை சில ஆண்டுகளில் பெற்றும் இருந்தார். தன் திறமையால் உயர்ந்த கீர்த்தி சுரேஷ் பற்றி சில உண்மைகளை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், அழகும் அதிர்ஷ்டமும் கலந்த ஒரு நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் என்றும் ஒருசில காலக்கட்டத்திலேயே முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டு நடித்து விட்டார். கீர்த்தி சுரேஷை நடித்த முதல் படம் தோல்வியானாலும் அவரை அறிமுகப்படுத்தியது ஏ எல் விஜய் தான்.
அப்படி அவர் மகாநடி படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகினார். அப்போது நடிகையர் திலகம் சாவித்ரி எங்க கீர்த்தி சுரேஷ் எங்க என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் கீர்த்தி சுரேஷையே ஓரங்கட்ட பார்த்தார்கள்.
அப்படியொரு எதிர்ப்புக்கும் மத்தியில் தன்னுடைய ந்டிப்பில் சரியான பதிலடி கொடுத்து அதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். அதன்பின் உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய கீர்த்தி சுரேஷ், நன்றாக கவிதை எழுதக்கூடியவர்.
அவர் எழுதிய கவிதைகள் கூட பத்திரிக்கையில் வந்ததாக, பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.