ஒதுக்கிய நடிகர்கள்! நம்பர் நடிகைக்கும் காப்பி இயக்குனருக்கும் இப்படியொரு கனெக்ஷனா?

tamilcinema tamilactress copydirector numberactress
By Edward Jan 18, 2022 02:15 PM GMT
Report

சினிமாவில் பல கஷ்டங்கள் மத்தியில் நல்ல ஒரு இடத்தினை பிடிக்கவேண்டும் என்ற வெறியில் அறிமுகமாகியவர்தான் நம்பர் நடிகை. டான்ஸ் மாஸ்டரை விட்டு பிரிந்தநிலையில், தமிழில் பல இயக்குனர்கள் நடிகர்கள் அவரை ஒதுக்கி தள்ளினார்கள்.

அந்த நடிகையா? வேண்டவே வேண்டாம் என்று கூறியதகவும் தெரிகிறது. அதனால் வெறுத்துபோய் அக்கடதேசத்துக்கு தாவி நடித்து வந்தார் நம்பர் நடிகை. பின் பிரம்மாண்ட இயக்குனரின் சிஷ்யனாக வளர்ந்த காப்பி இயக்குனரின் முதல் படத்தில் நடித்தார்.

நம்பர் நடிகைதான் வேண்டும் என்று அடம்பிடித்து கால்ஷீட் வாங்கியிருக்கிறார். நம்பர் நடிகையே எதிர்பார்க்காத அளவிற்கு அந்த படம் ஹிட் கொடுக்க விரும்ப்பம் இல்லாம கோலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

மீண்டும் தன்னுடைய எண்ணை பிடிக்க முன்னணி நடிகர்களை தேடி வந்து புக் செய்ய வைத்தார். இதையடுத்து முன்னணி நடிகருடன் ஹார்டிக் அடித்த படங்களில் இரு படத்தில் வாய்ப்பு கொடுத்து தூக்கிவிட்டார்.

தற்போது பாலிவுட் கிங்கான் படத்தில் கூட காப்பி இயக்குனர் நம்பர் நடிகையை தான் புக் செய்து வைத்துள்ளார்.. இப்படியொரு பெரிய கனெக்ஷனில் நம்பர் நடிகையும் காப்பி இயக்குனரும் இருந்து வருகிறார்கள்.