முதல் நாளே பவன் கல்யாணின் OG வசூல் வேட்டை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
இந்த வாரம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட பவன் கல்யாணின் They call him OG திரைப்படம் வெளிவந்தது. இயக்குநர் சுஜித் இப்படத்தை இயக்க தமன் இசையமைத்திருந்தார். பிரியங்கா மோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் இம்ரான் ஹாஷ்மி, வளர்ந்து வரும் வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
எந்த திரைப்படம் வெளிவந்தாலும், அப்படத்தின் வசூல் குறித்து நாம் பார்ப்போம். அந்த வகையில், OG திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் ரூ. 150+ கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்தின் செம மாஸ் ஓப்பனிங் ஆகும். முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடியுள்ள OG, இனி வரும் நாட்களில் எந்த அளவிற்கு வசூல் சாதனை படைக்கப்போகிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.