நடிச்சது ஒரேஒரு படம் தான்!! வாய்ப்பில்லாமல் ஓடங்கட்டப்பட்ட அங்காடிதெரு பட நடிகர்..
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது அங்காடி தெரு. நடிகர் மகேஷ் அறிமுக நடிகராக நடித்து நடிகை அஞ்சலி நடித்து வெளியான இப்பம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.
அப்படத்தினை தொடர்ந்து யாசகன், வேல்முருகன், இரவும் பகலும் உள்ளிட்ட படங்களில் நடித்த மகேஷ் எப்படமும் வெற்றியை கொடுக்காததால் வாய்ப்புகளை இழந்து காணாமல் போனார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ம்னா வருத்தத்துடன் பேசியுள்ளார் மகேஷ்.
விருப்பமே இல்லாமல் சினிமாவில் வந்தாலும் எண்ட்ரி ஆனதும் அதன் மோகம் அதிகமாகிவிட்டது.
ஆனால் அங்காடி தெரு படத்திற்கு பின் எந்த கதை தேர்வு செய்ய வேண்டும் என்றும் எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை என்றும் சொல்லிக்கொடுக்க யாரும் இல்லை என்பதால் சினிமாவில் என்னால் ஜொலிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார் மகேஷ்.
அப்படி எனக்கு வந்த வாய்ப்புகள் மூன்று வேறொரு நடிகர்களுக்கு சென்றுவிட்டது.
ஈட்டி படத்தில் அதர்வாவும், சுந்தர பாண்டியன் படத்தில் விஜய் சேதுபதியாகவும், மாயாண்டி குடும்பத்தார் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் சில சூழ்நிலையால் தவறவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.