நடிச்ச ஒரேவொரு படமும் பிளாப்!! 24 வருஷமாக விஜய்யை ஒதுக்கி வரும் பிரபல இயக்குனர்..
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து ரஜினி, கமல், சரத்குமார், விஜய், அஜித், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கி சூப்பர் ஹிட் படத்தினை கொடுத்தவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
சினேகம் கோசம் என்ற தெலுங்கு படம் உட்பட படையப்பா, சூர்யவம்சம், மின்சார கண்ணா, பாட்டாளி போன்ற 5 படத்தினை இயக்கி இருந்தார்.
ஆனால் அதில் படையப்பா, சூர்யவம்சம் படத்தை தவிர மற்ற மூன்று படங்கள் தோல்வியை சந்தித்தது.
அதிலும் மின்சார கண்ணா இன்று கதை நன்றாக கூறினாலும், அப்படம் பிளாப் என்று கே எஸ் ரவிக்குமாரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அப்படத்திற்கு பின் விஜய்யை துளிக்கூட கண்டுக்கொள்ளாமல் இருந்திருக்கிறார் கே எஸ் ரவிக்குமார். அதற்கு காரணம், படையப்பா போல் படத்தினை எதிர்ப்பார்த்தார்கள். படையப்பாவின் வெற்றி மின்சார கண்ணா படத்தின் தோல்விக்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.