பணமோசடி வழக்கு!! நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை?

Vimal Actors Tamil Actors
By Jai Jul 23, 2026 08:30 AM GMT
Report

நடிகர் விமல்

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விமல். சமீபத்தில் அவர் நடிப்பில் வேதம் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் மன்னர் வகையறாபட தயாரிப்புக்காக ரூ. 4.5 கோடி கடனாக பெற்று அதை திரும்பி கொடுக்காததால் வழக்கு போடப்பட்டது.

பணமோசடி வழக்கு!! நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை? | One Year Jail Sentence For Actor Vimal

காசோலை மோசடி வழக்கில் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னர் வகையறா படத்திற்காக பைனான்சியர் கோபியிடம் 4.5 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார். அதன்பின் அந்த தொகையை விமர் காசோலையாக கொடுத்துள்ளார். இந்த காசோயை கோபி வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது.

இதையடுத்து ரூ. 4.5 கோடி செக் மோசடி வழக்கை நடிகர் விமல் மீது பைனான்சியர் கோபி சென்னையிலுள்ள 11வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்காக விமல் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜரானப்பின் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பைனான்சியர் தரப்பு வக்கீல் ஆர் வெங்கடேஷ் ஆஜராஜி வாதிட்டார்.

இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிகப்பட்டதில், அவருக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கிறேன், வாங்கிய தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என்று நீதிபதி கூறியிருக்கிறார்.

இந்த தீர்ப்பு வழங்கும்போது நடிகர் விமல் கோர்ட்டில் ஆஜராஜியிருந்தார். அவர் தரப்பில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்கவும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.