நம்ம தல தோனியா? ஓ கதை அப்படி போகுதா..இதுதான் காரணமோ

thala ajithkumar msdhoni
By Edward Dec 02, 2021 10:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் தல என்ற பெயருக்கு சொந்தக்காரராக பல வருடங்களாக இருந்தவர் அஜித்குமார். தீனா படத்தின் ஏ ஆர் முருகதாஸால் வைக்கப்பட்ட பட்டப்பெயர் தல. அதிலிருந்து தல அஜித் தளபதி விஜய் என ஒரு பிராண்ட் இருந்து வந்தது.

இந்நிலையில் எந்த முடிவிலும் பக்குவமாக இருந்து வரும் அஜித் என்னை இனிமேல் அஜித்குமார், ஏ கே என்று மட்டும் அழைக்கலாம் தல என்று அழைக்க வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் தல சமுகவலைத்தளத்தில் டிரெண்ட்டிங்கானது.

இதற்கு காரணம் என்ன என்று கூறாமல் அறிக்கை அளித்தார் அஜித்குமார். இந்நிலையில் இதற்கு காரணம் சமுகவலைத்தளங்களில் அஜித்குமாரின் ரசிகர்களும் கிரிக்கெட் வீரர் தோனியின் ரசிகர்களுக்கும் இடையே சண்டை உருவானதுதானாம்.

அப்படியிருக்கையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமுகவலைத்தள பக்கத்தில் நம்ம தல தோனி என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளது ரசிகர்களின் கோபத்தை அதிகரித்துள்ளது.

நம்ம தல தோனியா? ஓ கதை அப்படி போகுதா..இதுதான் காரணமோ | Only Ajithkumar Not Thala Dhoni Meme