குடும்பமாய் சேர்ந்து சிவகார்த்திகேயனை அழிக்க நடந்த சதி!! உண்மையை கூறிய பத்திரிக்கையாளர்..
சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் தன் உழைப்பால் மிகப்பெரிய இடத்தினை பெற்று வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். பல போராட்டங்களுக்கு மத்தியில் சினிமாவில் பல பிரச்சனைகளை சமீபகாலமாக அனுபவித்து வருகிறார். அவரது பெயரையும் வெற்றியையும் கெடுக்க ஒரு குடும்பமே அழிக்க சதி செய்திருக்கிறார்கள் என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனிடம் நைசாக பேசி 4 படங்களில் நடிக்க கால்ஷீட் வாங்கி இருக்கிறார்கள் அந்த குடும்பம். சிவகார்த்திகேயன் கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பித்ததால் அந்த 4 படத்தை நம்பி தான் குறைவான சம்பளமாக இருந்தாலும் பரவாயில்லை என்று நடிக்க அட்வான்ஸ் தொகையையும் வாங்கியிருக்கிறார்.
ஆனால் அப்படங்களில் படப்பிடிப்பு கூட துவங்காமல், சிவகார்த்திகேயன் கேட்கும் போதெல்லாம் சரியான பதில் கூறாமல் வந்துள்ளனர். இதனால் பொறுமையை இழந்தை சிவகார்த்திகேயன் அந்த குடும்பத்திடம் வேறு படங்களில் நடிக்க செல்லலாமா என்று கேட்டுள்ளார்.
உங்கள் விருப்பம், நடித்து விட்டு வாங்க என்று அலட்சியமாக பதிலளித்துள்ளனர். பின் சிவகார்த்திகேயன் வேறொரு படங்களுக்கு செல்லும் போது அங்குள்ள தயாரிப்பாளர்கள் கமிட்டாகிய படத்தினை முடியுங்கள் இல்லை என்றால் அதிலிருந்து வெளியே வாங்க என்று கண்டீசன் போட்டிருக்கிறார்கள். இப்படி அவஸ்த்தையை பட்டு வந்த சிவகார்த்திகேயனுக்கு பின் தான் தெரிந்தது இதெல்லாம் அந்த குடும்பத்தின் சூழ்ச்சி தான்.
எப்படியோ அதிலிருந்து மீண்டு வந்த சிவகார்த்திகேயன் ஒப்பந்தமான படங்களை ரத்து செய்து தற்போது புது பொலிவுடன் கமல் ஹாசன் தயாரிப்பில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். இப்படி அந்த குடும்பம் என்று அத்தனை விசயத்தை கூறிய செய்யார் பாலு யார் அந்த குடும்பத்தினர் என்ற தகவலை கூறவே இல்லை.