ஜெயிலில் இருந்து வெளியேறிய குக் வித் கோமாளி புகழ்? முதலில் யாரை சந்தித்தார் தெரியுமா!!
விஜய் தொலைக்காட்சியின் மூலம் மக்கள் மத்தியில் தெரிய துவங்கியவர் புகழ். முக்கியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கி தந்தது. குக் வித் கோமாளி மூலம் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் புகழ்.
அதில் அஜித்துடன் வலிமை, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், சந்தானத்துடன் சபாபதி, ஆர்.ஜே. பாலாஜியுடன் வீட்ல விசேஷம் என பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது Zoo Keeper எனும் படத்தில் முதன் முறையாக கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில், நடிகர் புகழ் சிறையில் இருக்கும் வெளியே வரும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ அவர் புதிதாக நடித்து வரும் படப்பிடிப்பில் இருந்து ரகசியாக எடுக்கப்பட்டு லீக்காகியுள்ளது.
படப்பிடிப்பில் ஜெயில் உள்ளே இருந்து புகழ் வெளியே வரும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கடந்த ஒரு வாரங்களாக வைரலாகி இணையத்தினை முடிக்கியது, இந்நிலையில் தற்போது தன் வருங்கால மனைவியுடன் எடுத்த புகைப்படமும் போட்டோஷூட் ஷாட்களும் வைரலாகி வருகிறது.