நடிகர் விஜய் பட நடிகை சங்கீதாவா இது!! வைரலாகும் கணவரின் புகைப்படம்
90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல இடத்தினை பிடித்தவர் நடிகை சங்கீதா மாதவன் நாயர். மலையாளத்தில் நடிகையாக அறிமுகமாகி தமிழில், என் ரத்தத்தின் ரத்தமே, இதய வாசல், நாட்டுக்கு ஒரு நள்ளவன், நாங்கள் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
1998ல் வெளியான பூவே உனக்காக படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து மிகப்பெரியளவில் புகழப்பட்டார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த சங்கீதா 2000 ஆம் ஆண்டு சரவணன் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார்.
குடும்பம், குழந்தை என்று பார்த்து வரும் சங்கீதா 14 ஆண்டுகள் கழித்து மலையாள படத்தில் நடித்திருந்தார். சங்கீதாவின் கணவர் சரவணன் ஒரு ஒளிப்பதிவாளர்.
ஆஹா என்ற படத்தின் ஷூட்டிங்கில் தான் அவருக்கும் சங்கீதாவுக்கும் காதல் ஏற்பட்டதாக கூறியிருந்தார். தற்போது அவரது கணவரின் சமீபத்திய புகைப்படம் வைரலாகி வருகிறது.

