ஆஸ்கர் சிலையின் விலை எவ்வளவு தெரியுமா? யாரும் அறியாத விஷயம்...
ஆஸ்கர் விருது
மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாக இருப்பது தான் ஆஸ்கர் விருது. சினிமா சார்ந்த அனைத்து துறைகளுக்கும் இந்த விருது ஆண்டு தோறும் கொடுக்கப்பட்டு வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் 99வது ஆஸ்கர் விருது விழா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விருது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று விழாவில் பிரபலங்கள் அணிந்து வரும் ஆடைகளும் பெரியளவில் கவனத்தை ஈர்க்கும். அதேபோல் பிரபலங்கள் ஏதாவது நிகழ்ச்சி சமயத்தில் செய்தாலும் பெரியளவில் பேசப்படும். அந்தவகையில் ஆஸ்கர் சிலையின் உயரம் மற்றும் அதன் மதிப்பு என்ன? எவ்வளவு? என்பதை பார்ப்போம்.
ஆஸ்கர் சிலை
ஆஸ்கர் சிலையின் உயரம் மட்டும் 13.3 இன்ச் (34.3 செமீ)ஆகும். அதன் எடை 3.866 கிலோவாம். முதல்முறையாக 1928ல் இருந்து ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அகாடமி ஆஃப் மோஷன் பிக்ஸர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற அமைப்பு தான் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதினை வழங்கி வருகிறார்கள். ஆரம்பத்தில் 36 உறுப்பினர்கள் கொண்ட ஆஸ்கர் அமைப்பில் தற்போது 600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
5 முக்கிய தூண்
மெட்ரொ கோல்டன் மேயர் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கலை இயக்குநர் செட்ரிக் கிபான்ச் என்பவர்தான் ஆஸ்கர் சிலையை வரைந்துள்ளார். வாள் ஏந்திய பெண் நிற்பது போன்ற வடித்தை வரைந்ததை அமெரிக்க சிற்பியான ஜார்ஜ் மேலேண்ட் ஸ்டான்லி என்பவர் முப்பரிமான்ண வடிவமைத்தை கொடுத்துள்ளார்.
5 முக்கிய தூண்களை சுட்டிக் காட்டும் வகையில் தான் ஆஸ்கார் சிலையில் 5 ஸ்போக்குகள் இருப்பது போல் வடிவமைப்பு இருக்கும். ஆரம்பத்தில் வெண்கலனில் செய்யப்பட்டு அதற்கு தங்கமுலாம் பூசப்பட்டது. தற்போது வெண்கலம், தாமிரம், தகரம், ஆண்டிமனி உள்ளிட்டவைகளால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டு வருகிறது.
ஆஸ்கார் விருதின் ஆரம்ப பெயர் அகாடமி அவார்டு ஆஃப் மெரிட் என்பதாம். தற்போது ஆஸ்கர் சிலையின் அமெரிக்க டாலர் மதிப்பு 400 டாலர் வரை செலவாகும். இந்த சிலையை அகாடமியின் தயாரிப்பு நிறுவனம் தவிர வேறு யாரும் தயாரிக்க அனுமதியில்லை. ஆஸ்கர் விருதை வாங்கும் கலைஞர்கள் இதை யாருக்கும் விற்கக்கூடாது என்பது அகாடமியின் உத்தரவாக இருக்கிறதாம்.