அம்பானி, அதானிக்கு போட்டிப்போடும் பெண் கோடிஸ்வரி!! இந்தியாவின் 3வது பணக்காரர் இவர்தான்..
உலகளவில் அனைவராலும் வியந்து பார்க்கும் கோடிஸ்வரர்களாக முகேஷ் அம்பானி, கெளதம் அதானி இந்தியளவில் முதல் இரண்டு இடங்களில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அவர்களுக்கு அடுத்து 3வது இடத்தில் யார் இருக்கிறார் என்றால்? அது யாருக்கும் தெரியாமல் இருக்கும். தற்போது இந்தியாவின் 3வது பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்றிருக்கிறார் ரோஷ்னி நாடார் மஹோத்ரா.
இந்தியாவின் 3வது பணக்காரர்
HCL குழுமத்தலைவரான ஷிவ் நாடார், தனது மகளான ரோஷ்னி நாடாருக்கு தனது நிறுவனப்பங்கில் 47 சதவீத்ததை அவருக்கு மாற்றியிருக்கிறார். இதன்மூலம் அவர்கள் நிறுவனத்தை மிகப்பெரிய பங்குதாரராக ரோஷ்னி மாறினார். மேலும் HCL கார்ப்ரேஷனின் HCL இன்ஃபோசிஸ்டம்ஸில் இருக்கும் 49.94 சதவீத பங்குகளையும் சொந்தமாக்கியுள்ளார். இதனால் ரோஷ்னியின் சொத்து மதிப்பில் மிகப்பெரியளவில் அதிகரித்துள்ளது.
ரோஷ்னி நாடார்
அந்தவகையில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து 88.1 பில்லியன் டாலர்கள். 2வது இடத்தில் இருக்கும் கெளதம் அதானியின் சொத்து 68.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
பங்குகளை மாற்றியதற்கு பின் ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு 35.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதன்பின் 3வது இடத்தினை பிடித்துள்ளனர். தற்போது வாமா சுந்தரி இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம் HCLTech நிறுவனத்தில் 44.71 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.
மகள் ரோஷ்னி நாடார் HCL டெக்னாலஜியின் தலைவராக பொறுப்பேற்றதால் இந்தியாவில் பட்டியலிடப்பட்ட ஐடி நிறுவனத்தை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்ரார்.
CSR வாரியக் குழுவின் உறுப்பினராகவும், ஷிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் இயற்கை வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக மசாலாப் பொருட்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அவர் 'தி ஹேபிடேட்ஸ் டிரஸ்ட்' ஐ ரோஷ்னி நாடார் நிறுவியிருக்கிறார்.
ஷிவ் நாடார் குடும்பத்தின் சொத்து மதிப்பு 2024 அக்டோபர் கணக்கின் படி 42 பில்லியன் அமெரிக்க டாலர்களாம். அதில் ரோஷ்னி நாடாரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 1,86,782 கோடிகளாம்.