பெத்த மகனை இப்படியா சொல்றது!! அந்த விசயம் நடக்காமல் போக விஜய் தான் காரணம்!! எஸ் ஏ சி ஓப்பன்..
தமிழ் சினிமாவில் புரட்சி இயக்குனராக திகழ்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். தன் மகன் விஜய்யை அறிமுகம் செய்து 7 படங்களை அவரை வைத்து இயக்கி இருந்தார். ஒருசில படங்களில் நடித்து வரும் எஸ் ஏ சி அவர்கள் மகனால் கைவிடப்பட்டார் என்று சில விமர்சனங்கள் விஜய் மீது திணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சித்ரா லட்சுமணன் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அஜித்தை இயக்கும் வாய்ப்பு வந்ததா? அல்லது இப்போது வந்தால் இயக்குவீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு, முன்பு வரவில்லை.
அதுவும் பெரிய நடிகர்கள் வாய்ப்பு வந்தாலும் விஜயோட அப்பா என்ற கெட்டப்பெயர் என்று கூறியவர் அப்படியே வார்த்தையை முழுங்கி மழுப்பலாக விஜயோட அப்பான்னு பயந்தார்கள் என்று தெரிவித்தார். நமக்கு தோல்வி படங்களை கொடுத்து விடுவாரோ என்ற பயமும் அதனாலே பலவாய்ப்புகள் போயிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சினிமான்னு வந்தா ஜெயிக்கனும்னு என் மனநிலை இருக்குமோ தவிர என் மகன் என்றெல்லாம் நினைக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் எஸ் ஏ சி. அஜித்தை வைத்து இயக்க பர்ஸ்ட் என்னை நம்பி படத்தை கொடுக்க வேண்டும் அல்லவா என பேட்டியில் தெரிவித்துள்ளார்.