நான் லெஸ்பியனா, திருமணம் செய்யாததற்கு காரணமே அதுதான்!..நடிகை ஓவியா ஓபன் டாக்
மலையாள படங்களில் நடித்து வந்த ஓவியா, கடந்த 2010 -ம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியா பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஓவியாவிடம் நீங்கள் லெஸ்பியன் என்று சிலர் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர் இதற்கு உங்கள் பதில் என்ன என்று தொகுப்பாளர் கேட்டார்.
பதில் அளித்த ஓவியா, இது போன்ற கமன்ட்களை கேட்கும் போது ஒரு மாதிரியா இருக்கும். ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.
நான் லெஸ்பியன் இல்லை.
சிலர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், பலரும் திருமணம் செய்து ஏன் அதை பண்ணோம் என்று கஷ்டப்படுகிறார்கள். எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்று ஓவியா கூறியுள்ளார்.