சரக்கு அடிக்க ஆரம்பிச்சா எக்ஸ்ட்ரீமுக்கு போயிடுவேன்!.அட்ஜஸ்ட்மென்ட் அனுபவத்தை வெளிப்படையாக பேசிய ஓவியா

Oviya Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 28, 2023 05:04 AM GMT
Report

விமல் நடிப்பில் வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா.

இப்படத்தை தொடர்ந்து மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஓவியா பல படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் என்றே கூறலாம்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓவியா, "நான் ஒன்னும் குடிப்பழக்கத்திற்கு அடிமை இல்லை. சரக்கு எல்லாம் நான் சின்ன வயசுலயே அடிச்சு முடிச்சுட்டேன். எதுவா இருந்தாலும் அதன் எக்ஸ்ட்ரீமையே பார்த்து விடுவேன். இப்போ சரக்கு எல்லாம் போர் அடித்துவிட்டது".

மேலும் அவர் கூறுகையில், "சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கு, நிறைய பேரு அப்படி பண்ணுவாங்க. அதெல்லாம் பண்ணியிருந்தா நான் ஏன் இப்படி இருக்கேன். அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிதான் பெரிய ஆளாக மாறனும் என்ற ஆசையே இல்லை என்று ஓவியா" கூறியுள்ளார்.