இவங்கதான் பிக்பாஸ் அல்டிமேட் வின்னாரா? ஆனால் வடபோச்சே..

biggboss oviya kamalhaasan sujavarunee biggbossultimate
By Edward Jan 30, 2022 03:00 PM GMT
Report

பிக்பாஸ் 5 சீசனுக்கு பிறகு பிரபல ஓடிடி தளத்தில் 24 மணிநேரமும் ஒளிப்பரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். இந்நிகழ்ச்சியையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். யார் யார் போட்டியாளர் என்று பிரமோ வீடியோ அறிவித்து வருகிறார்கள்.

அதில் நடிகை ஓவியாவும் அந்த லிஸ்டில் இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். அவர்தான் டைட்டிலை தட்டிச் செல்வார் என்றளவிற்கு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் படம் ஒன்றில் கமிட்டாகியதால் அதன் காரணமாக நடிகை ஓவியா கலந்து கொள்ளவில்லையாம். இதனால் ஓவியா ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.

ஓவியா இல்லாத பிக்பாஸ் அல்டிமேட் வேண்டாம் என்றும் கூறி வருகிறார்கள். அவருக்கு பதிலாக பிக்பாஸ் சுஜா வருணியை கொண்டு வந்துள்ளனர். 

அவரை போல ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா, லொஸ்லியா, ஷிவானி, ரம்யா பாண்டியன், பாவனி போன்ற அதிக ரசிகர்களை கொண்டவர்களும் இதில் இல்லையாம்.