4000 ஆயிரம் கோடி மதிப்பில் மாளிகை!! 700 சொகுசு கார்களை வைத்திருக்கும் குடும்பம்! யாருப்பா அது..
அல் நஹ்யான் அரச குடும்பம்
உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் 2025 ஆம் ஆண்டியில் 17வது இடத்தினை பிடித்திருக்கிறார் முகேஷ் அம்பானி. ஆனால் அவர்களைவிட உலகின் டாப் பணக்காரர் வரிசையில் ஆசியாவை சேர்ந்த அல் நஹ்யான் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் தான் சொத்து மதிப்பு அதிகமாக இருக்கிறதாம். இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 300 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இருக்குமாம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை ஆளும் அல் நஹ்யான் அரச குடும்பத்தினரிடம் தான் அத்தனை சொத்துக்கள் உள்ளதாம். அபுதாபியை சேர்ந்த அல் நஹ்யான் குடும்பத்தின் மிகப்பெரிய செல்வம், முதன்மையாக பாலைவன நாட்டின் பரந்த எண்ணெய் இருப்புகளில் இருந்து தான் வருகிறதாம். அல் நஹ்யான் குடும்பத்தினர் அபுதாயில் இருக்கும் காசர் அல் வதன் அரண்மனையில் வசித்து வருகிறார்கள். குலத் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தான் குடும்பத்தை வழி நடத்தி வருகிறார்.
4000 ஆயிரம் கோடி மதிப்பில் மாளிகை
காசர் அல் வதன் அரண்மனை இன்றைய சந்தை மதிப்பில் ரூ. 4000 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்குமாம். ஆடம்பரமான மாளிகையில் 1000 அறைகள், ஒரு திரையரங்கம், ஒரு பந்துவீச்சு சந்து, நீச்சல் குளங்கள் உள்ளிட்ட ஒரு தனிப்பட்ட மசூதி போன்றவைகள் இருக்கிறது.
அரச குடும்பத்தினரிடம் ஒரு பிரம்மாண்ட சொகுசு சூப்பர் படகும், தங்க முலாம் பூசப்பட்ட லம்போர்கினி அவெண்டடோர் எஸ் வி கார் உட்பட 700க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை சேகரித்து வைத்திருக்கிறார்களாம். இப்படியொரு சொத்து வைத்திருந்தாலும் அல் நஹ்யான் குடும்பம் உலகின் பணக்கார குடும்பமாக இல்லையாம்.
அந்த இடத்தை வால்டன் குடும்பம் தான் பிடித்துள்ளது. இவர்கள் தான் வால்மார்ட் பல்பொருள் அங்காடி நிறுவனத்தை சொந்தமாகக்கொண்டுள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 432 பில்லியன் டாலர்களாம்.