விட்டா வேட்டையனை காதலிச்சிடுவேன்!! இயக்குனரிடம் ரஜினி மனைவி லதா கூறியது இதான்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பல நடிகைகளை காதலித்து கிசுகிசுவில் சிக்கி அதன்பின் லதாவை அனைவரின் முன்னிலையில் திருமணம் செய்து ஐஸ்வர்யா, செளந்தர்யா என்ற இரு மகள்களை பெற்றெடுத்தனர்.
இத்தனை வருடம் இருவரும் நன்றாக வாழ்ந்து ரஜினிக்கு சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி மனைவி லதா ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருந்து வருகிறார் என்று பல மேடைகளில் சூப்பர் ஸ்டார் கூறியும் வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் பி வாசு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சந்திரமுகி படத்தை பார்த்துவிட்டு 4 வாரம் கழித்து ரஜினி மனைவி லதா எனக்கு கால் செய்திருந்தார்.
அப்போது என்னிடம் நான் எவ்வளவோ படங்கள் பார்த்துள்ளேன், ஆனால் வேட்டையனை பார்த்தால் லவ் பண்ணனும் என்கிற ஃபீலிங் இருக்குது, அந்த கேரக்டரை பெரிதாக பண்ணுங்க என்று கூறினாராம்.
நானும் அதை அப்பவே பண்றேன்னு சொல்லியிருந்தே. ஆனால் சந்திரமுகி படத்தின் தொடர்ச்சி 2 பாகம் என்று சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.