தமிழ் சினிமாவை மாற்றிய “பா”இயக்குநர்களின் சாம்ராஜ்ஜியம் ஓய்ந்தது..
இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று ஜூன் 10 ஆம் தேதி காலை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய 84 வயதில் மரணமடைந்தார். பாரதிராஜாவின் இழப்பு இந்திய திரையுலகத்தையே அதிரவைத்த நிலையில் அவரது இறுதி சடங்கு, பாரதிராஜாவின் சொந்த ஊரில் நடக்கவுள்ளது.

“பா” வரிசை இயக்குநர்கள்
இந்நிலையில், தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்த “பா” வரிசை இயக்குநர்களான கே பாலசந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா ஆகிய மூவரும் காலமானாலும் அவர்கள் விட்டுச் சென்ற படைப்புகள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும். பாலசந்தர் திரையுலகின் பல நட்சத்திரங்களை அறிமுகம் செய்த பெருமைக்குரியவர்.
பாலுமகேந்திரா எதார்த்தமான காட்சியமைப்புகளால்
சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தினார். பாரதிராஜா
கிராமத்து மண்வாசனையை திரைக்கு கொண்டு வந்தார்.
மூத்த வழிகாட்டி பாலசந்தர், ஒளிப்பதிவு மேதை
பாலுமகேந்திரா, இமயம் பாரதிராஜா ஆகியோரின் மறைவு
தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய பேரிழப்பாக இருந்துள்ளது.
இவர்கள் உருவாக்கிய உயிரான சினிமா என்றும் ரசிகர்கள்
மத்தியில் நீடிக்கும் என்பதே நிஜம்.