ரஜினியின் கபாலி படத்தால் மன உளைச்சலில் சிக்கிய இயக்குனர்.. மேடையில் கண்கலங்கிய பா ரஞ்சித் அம்மா

Rajinikanth Pa. Ranjith Kalaippuli S Thanu
By Edward Aug 23, 2022 03:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு நடிகர் தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா போன்ற நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் அட்டக்கத்தி. வெங்கட் பிரபு, சசிகுமார் உள்ளிட்ட இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றி இயக்குனர் அவதாரம் எடுத்தார் பா ரஞ்சித்.

இப்படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த அடுத்த இரண்டு ஆண்டுகளில் மெட்ராஸ் என்ற படத்தினை இயக்கி வெளியிட்டார். கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதன்மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி, காலா படத்தினை இயக்கி பல கோடி வசூலை சம்பாதித்து கொடுத்தார்.

பின் ஆர்யாவின் சார்ப்பட்டா பரம்பரை, விக்டிம் போன்ற படங்களை இயக்கினார். தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி நேற்று நடந்துள்ளது. நிகழ்ச்சியில் பேசிய பா ரஞ்சித், சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்திற்கு பிறகு மன உளைச்சலில் இருந்ததாக கூறியுள்ளார்.

படம் தோல்வி என்று சினிமாவில் இருப்பவர்களே விமர்சித்தார்கள். ஆனால் கபாலி படத்தின் தயாரிப்பாளர் தானு அதெல்லாம் கிடையாது. படம் இப்படி வசூலித்தது என்று லிஸ்ட்டை காட்டினார்.

படத்தின் கிளைமேக்ஸ் காட்சி தானு சாருக்கு பிடிக்கவில்லை. ஆனால் வேற என்ன வேண்டும் என்று கேட்டு படத்தினை முடி என்று அவர் பாட்டுக்கென்று சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார் பா ரஞ்சித்.