Womens T20 World Cup : இந்தியாவுக்கு ஆப்பு வைத்த பாகிஸ்தான்!! ஏன் 8 கேட்ச்கள் விட்டாங்க தெரியுமா?
Womens T20 World Cup
2024 ஆம் ஆண்டின் மகளிர் டி20 உலக கோப்பை போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஏ பிரிவில் ஆஸ்திரேலியா அரையுறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தான் கையில் தான் இருந்தது.
நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டியில் பாகிஸ்தான் வெற்றிப் பெற்றால் இந்தியா அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு இருந்தது.
ஆனால் நியூசிலாந்து அணி கொடுத்த 110 ரன்களை கூட எடுக்க முடியாமல் வெறும் 56 ரன்களில் ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் போட்ட சதி
துபாயில் நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்து அணி மிகமோசமாக பேட்டிங்கில் தடுமாறியது. ஆனால் பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் அதைவிட படுமோசமாக இருந்தது.
ஃபீல்டர்கள் வரிசையாக கேட்ச் விட சுமார் 8 கேட்ச்களை பாகிஸ்தான் வீராங்கனைகள் கோட்டைவிட்டனர்.
அதோடு பேட்டிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து 11 ஓவர் முடிவதற்குள் ஆல் அவுட் ஆகியிருக்கிறார்கள் பாகிஸ்தான் அணியினர்.
இது தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இது முழுக்க முழுக்க பாகிஸ்தான் அணி வேண்டுமென்றே இந்திய அணி முன்னேறக்கூடாது என்பதற்காக சதி போட்டார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Pakistan dropped 8 catches against New Zealand. ?pic.twitter.com/kW53N2A31t
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 14, 2024