பாகிஸ்தான் வீரரிடம் ஓவராக வாய்விட்டு அசிங்கப்பட்ட ஹர்பஜன் சிங்

harbajan singh india vs pakistan
By Tony Oct 27, 2021 07:29 AM GMT
Report

இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் என்றாலே உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பு இருக்கும். அதிலும் உலகக்கோப்பையில் இவர்கள் மோதுகிறார்கள் என்றால் சொல்லவா, வேண்டும்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மேட்சில் இந்தியா படுதோல்வியடைந்தது, இதனால் இந்தியர்கள் மிகவும் மனம் நொந்தார்கள்.

ஏனெனில், பாகிஸ்தானிடம் உலகக்கோப்பையில் இந்தியா தோற்றதே இல்லை என்ற ரெக்கார்ட் முறியடிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஹர்பஜன் பாகிஸ்தான் ப்ளேயர்களை சீண்டும் விதமாக நிறைய இடத்தில் பேசினார்.

அதற்கு வெற்றி பெற்றதுமே பல பாகிஸ்தான் ப்ளேயர்கள் ஹர்பஜனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக அக்தர், அமீர் போன்ற வீரர்கள் நேரடியாகவே கிண்டல் செய்து வருகின்றனர்.