வாய் பேச்சுன்னா அது பாகிஸ்தான் தான் ஜெயிக்கும்!! கலாய்த்து தள்ளிய ஹர்பஜன் சிங்..
Ind vs Pak match
கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஆன டி20 போட்டிகளில் இந்திய அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் வெறும் 3 போட்டிகளிலும் தான் வென்றிருக்கிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை 2025-கான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. ஆனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்திய வீரர்களிடம் வம்பிழுத்து சீன் போட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து பலரும் பாகிஸ்தான் அணி வீரர்களை விமர்சித்து வந்த நிலையில், முன்னாள் இந்திய அணியின் வீரர் ஹர்பஜன் சிங் கலாய்த்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
ஹர்பஜன் சிங்
அதில், வாய்ப்பேச்சில் போட்டி என்றால் அது நிச்சயமாக பாகிஸ்தான் அணிதான் வென்றிருக்கும். ஆனால் இது பேட்டிற்கும், பாலுக்கும் இடையிலான போட்டி, அதனால் தான் பாகிஸ்தானால் ஜெயிக்க முடியவில்லை. இதில் இந்திய அணி மிகவும் பிரமாதமாக விளையாடி வருகிறது.
பாகிஸ்தான் அணியின் சீனியர் பவுலர் ஹாரிஸ் ரவுப் மற்றும் ஷாகின் அப்ரிடி, அதிக ரன்களை விட்டுக்கொடுக்கிறார்கள். முதல் ஆறு ஓவரில் ஒரு விக்கெட்டை கூட பாகிஸ்தான் பவுலர்களால் எடுக்க முடியவில்லை. அனுபவம் வாய்ந்த வீரர்களை வைத்துக்கொண்டு விளையாடியிருக்கிறார்கள்.
அனுபவ வீரர்களே இப்படி கத்தி பேசி பந்தாலும் பேட்டாலும் செயல்பட முடியவில்லை என்றால், அவர்கள் எதை நோக்கி செல்கிறார்கள் என்று நம்மால் புரிந்துக்கொள்ள முடியும். பாகிஸ்தான் வீரர்கள் எவ்வளவு முடிகிறதோ, அவ்வளவு பேசட்டும் நாம் பந்தாலும் பேட்டாலும் பதில் சொல்வோம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.