மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்த நடிகர் பாண்டியன்!! எமோஷ்னலான மகன் ரகு..
பாண்டியன்
சினிமாவை தாண்டி அரசியலில் ஈடுபட்டு பல கட்சிகளில் பணியாற்றி மறைந்தவர் தான் நடிகர் பாண்டியன். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய பாண்டியனின் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை ஏற்பட்டு 2008ல் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
உச்சத்தில் இருந்த பாண்டியன், 49 வயதிலேயே மரணமடைந்தது தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவர் குறித்து பலர் சில தகவல்களை பகிர்ந்து வந்த நிலையில், பாண்டியனின் மகன் ரகு சில விஷயங்களை உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
மகன் ரகு
அதில் என் அப்பாவுக்கு மாம பெண்ணையே திருமணம் செய்து வைத்ததால் விருப்பமே இல்லாமல் திருமனம் செய்து கொண்டார். எப்போது பிஸியாக இருக்கும் அப்பா, சினிமா, அரசியல் என சுழன்று கொண்டே இருந்தும் ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்தார். ஃப்ளைட் ஏஜெண்ட்சியாக இருந்து, இலவசமாக எத்தனையோ ஏழை மாணவர்களை படிக்க வைத்தார்.
சென்னையில் எங்களுக்கு எந்த வீட்ம் இல்லை, அங்கே இருந்த வீட்டையும் விற்றுவிட்டு மதுரைக்கே வந்துவிட்டோம், ஆனால் சம்பாதித்த சொத்துக்களை எல்லாம் என் அப்பா இழந்துவிட்டார். காங்கிரஸ் கட்சியில் அப்பா இருந்தபோது எம்ஜிஆர் சார் நிறைய உதவியது பக்கபலமாக இருந்தது. திமுகவில் இருந்தபோது கலைஞர் ஐயா நிறைய உதவிகளை செய்து தன்னுடனே வைத்து கவனித்துக்கொண்டார்.
அதேபோல் அதிமுகவில் இருக்கும்போது அம்மா நிறைய உதவிகளை செய்தார். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஜெயலலிதா அம்மா ஏராளமான உதவி செய்தார். 5 வருடம் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டார்.
ஆனால் அவருக்கு சின்ன வயசிலேயே கல்லீர பிரச்சனையும் இருந்துள்ளது. தண்ணி அடிக்காமல் இருந்து தன்னுடைய உடம்பையும் கொஞ்சம் கவனித்து கொண்டிருந்திருக்கலாம் என்று பாண்டியன் மகன் ரகு பேசியுள்ளார்.