பாண்டியனை ரோட்டுக்கே கொண்டு வந்த மனைவி கோமதி!! இந்த வாரம் ஒரே ஃபன் தான்...
Nirosha
Viral Video
Star Vijay
Tamil TV Serials
Pandian Stores
By Edward
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் கடந்த வாரம், மயிலின் பெற்றோர், சரவணன் வேறொரு பெண்ணிடம் பேசி வருவதை அறிந்து பாண்டியன் குடும்பத்தினரிடம் கூறி சண்டை போட்டனர்.
இதனையடுத்து வரும் வார எபிசோட்டின் பிரமோ வீடியோ தற்போது வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கணவர் பாண்டியனுடன் பேசாமல் இருக்கும் கோமாதி, ரோட்டில் நடக்க ஆரம்பிக்க, இதை பார்த்த பாண்டியன் அவர் பின்னாடியே சென்றுள்ளார்.

ரோட்டில் நடப்பதை பார்த்த பலரும் வியந்து பார்க்க என்ன செய்வது என்று பாண்டியன் புலம்புகிறார். மனைவி கோமதியை பாண்டியன் சமாதானப்படுத்துவாரா என்ற கேள்விக்குறியோடு இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இருக்கப்போகிறது.