பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் தங்கையை பார்த்துளீர்களா? சகோதரிகள் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோ

Pandian Stores photo mullai serial
By Jon Mar 23, 2021 03:22 PM GMT
Report

ரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த ஒரு சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர். அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை கூறும் இந்த கதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளதால்.

தற்போது அந்த சீரியலை பிற மொழிகளிலும் ரீமேக் செய்யவுள்ளனர். இதனிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தவர் தான் VJ சித்ரா, அவரின் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

இந்நிலையில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் காவியா என்பவர் நடித்து வருகிறார், இவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி புதிய முல்லையாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். மேலும் புதிய முல்லையான காவ்யா சமூக வலைதள பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது காவ்யா தனது தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.