டிஆர்பிக்கு மிகப்பெரிய ஆப்பு வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்? யார் விலகப்போறது தெரியுமா!!

Serials
By Edward Jun 17, 2022 07:59 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். கூட்டு குடும்பத்தினை மையப்படுத்தியும் அண்ணன் தம்பி பாசப்பினைப்பினையும் மையமாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் வரும் அனைத்து கதாபாத்திரமும் மக்கள் மத்தியில் ஆழமாக கவர்ந்த நிலையில் டிஆர்பியிலும் முக்கிய இடத்தினை பிடித்து வருகிறது. அதேபோல் இந்த சீரியல் மூலம் பல நடிகர் நடிகைகள் பிரபலமாகியிருக்கிறார்கள். அதில் முல்லை கதாபாத்திரமும் ஒன்று. முதலில் முல்லையாக விஜே சித்ரா நடித்து வந்தார்.

அதன்பின் காவியா அந்த கதாபாத்திரத்தை தாங்கி பிடித்து வருகிறார். தற்போது மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரம் விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மூர்த்தி அண்ணனாக நடித்து வரும் ஸ்டாலின் தான் ஒருசில காரணங்களால் சீரியலில் இருந்து விலகவிருக்கிறாராம்.

வேறொரு தொலைக்காட்சி ஆரம்பிக்கும் குடும்ப கதையில் மூத்த அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகவுள்ளாராம் இவருக்கு பதில் வேறொரு யாரை இயக்குனர் தேர்ந்தெடுப்பார் என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள்.