இதுதான் கடைசி எபிசோட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எடுத்த அதிரடி முடிவு..புகைப்படம்
serial
pandian stores
sujitha
Vadinamma
By Jai
பிரபல தொலைக்காட்சி சேனலில் அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும்பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
தமிழில் நல்ல வரவேற்பு பெற்று வருவதை போன்று இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டும் வருகிறது. இந்நிலையில் தெலுங்கில் Vadinamma என்ற பெயரில் ஒளிப்பரப்பாகி வந்தது.
தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளதாக சீரியலின் முக்கிய பங்கினை வகித்துள்ள நடிகை சுஜிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி கலைஞர்கள் அனைவரும் வணக்கம் என்று கூறி எடுத்துக்கொண்ட புகைப்படத்தோடு இந்த செய்தியை அறிவித்துள்ளார் சுஜிதா.