சரத்குமார் தேவயானிகே டஃப் கொடுக்கு கதிர் - முல்லை!! சூரிய வம்சத்தை அப்படியே காப்பி அடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ்..

Sarathkumar Radhika Sarathkumar Serials
By Edward Aug 13, 2022 11:00 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களால் சமீபகாலமாக டிஆர்பியை எகிறவிட்டு வருகிறது. அப்படி ராஜா ராணி, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் முக்கியப்பங்கு வகித்து வருகிறது.

அண்ணன் தம்பி பாசக்கதையாக ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை - கதிர் வீட்டைவிட்டு வெளியேறி தனியாக ஒரு சிறு ஓட்டலை வைத்து திறக்க முயற்சி எடுத்துள்ளனர். கதிர் செய்த காரியத்தால், மூர்த்தி, தனம், ஜீவா, மீனா, கண்ணா, ஐஸ்வர்யா பிடிவாதம் பிடித்து கடை திறப்பிற்கு செல்லாமல் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் அண்ணனுக்காக காத்திருக்கும் கதிர் ஏமாற்றத்துடன் இருக்கையில், குடும்பத்தினருக்கு தெரியாமல் கடை திறப்புக்கு மூர்த்தி செல்கிறார். சிறுமியை கடைக்கு உணவு பொட்டலங்களை வாங்க சொல்லி அனுப்பி விடுகிறார் மூர்த்தி.

முதல் போனியாக அண்ணன் அனுப்பிய சிறுமி வாங்கியதை எடுத்து செல்கிறார். அவருக்கு அடுத்து ஜீவாவும் கதிர் கடை திறப்பு செல்கிறார். அப்படியே ஒருவர் ஒருவராக கதிர்-முல்லை கடைக்கு சென்று வருகிறார்கள்.

இதை பார்க்கும் போது சரத்குமார், தேவயானி நடித்த சூர்ய வம்சம் கதையை காப்பி அடித்துவிட்டு இருக்கிறார் இயக்குனர். சூர்ய வம்சம் படத்தையே மிஞ்சும் அளவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மாறிவிட்டதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.