அடிமட்டதுக்கு இறங்கி பிரபல நடிகரிடம் மன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி.. உண்மையை கூறிய பாண்டியராஜ்

Pandiarajan Rajinikanth
By Edward Mar 25, 2023 05:07 AM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் பற்றி பலர் புகழ்தும் அவரின் பெருந்தன்மையையும் கூறியும் வருவார்கள். அந்தவகையில் 90ஸ் காலக்கட்டத்தில் காமெடி கலந்த படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பாண்டியராஜன் ரஜினிகாந்த் தன்னிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஒருமுறை வெளிநாடு செல்ல விமான நிலையத்திற்கு செல்லும் போது ரஜினி காந்தும் அப்போது வந்தார். அவரை பார்த்த நான் அவரோடு பேச கை அசைத்தேன் ஆனால் ரசிகர்களின் கூட்ட நெரிசல்களில் என்னை கவனிகாமல் சென்றார். அதன் பின் சூப்பர் ஸ்டாரிடம் இருந்து கால் வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார்.

என்னை கண்டுகொள்ளாமல் சென்றதற்கு மனவருந்தி மன்னிக்கவும் என்று கேட்டது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் இருக்கும் நிலைக்கு என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய விஷயம் இல்லை. ஆனால் அவர் எவ்வளவு பெரிய நடிகர் எப்படி ஒரு குணம் இருந்தால் அதை செய்வார் என்று பாண்டியராஜ் மனம் உருகி கூறியுள்ளார்.