கின்னஸ்-க்கு ஆப்பு வைத்துக்கொண்ட பார்த்திபன்! படமே அந்த மாதிரி இருந்தா?

Parthiban A R Rahman Robo Shankar Iravin Nizhal
2 மாதங்கள் முன்
Edward

Edward

தமிழில் சினிமாவில் தனக்கென ஒரு பாணியில் படங்கலை இயக்க ஆரம்பித்து நல்ல ஒரு இடத்தினை பிடித்தவர் இயக்குனர் பார்த்திபன்.

இயக்கம், கதை ஆசிரியர், நடிகர் என பன்முகத்திறமை வைத்திருக்கும் பார்த்திபன் சமீபத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இரவில் நிழல் என்ற 90 நிமிட படத்தினை எடுத்துள்ளார்.

இதற்காக பல ஆண்டுகளாக யோசித்து 2 மாதங்களாக ரிகர்சலுக்காகவே நேரத்தை செலவிட்டு தற்போது எடுத்து முடித்துள்ளார். இப்படத்தினை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் மீது பார்த்திபன் மைக்கினை தூக்கி எறிந்த விஷயம் மிகப்பெரியளவில் சர்ச்சையை கிளப்பியது. அதற்காக பார்த்திபன் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், ஏற்கனவே பார்த்திபன் எடுத்த உள்ளே வெளியே படத்தில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பார். அதேபோல் இப்படத்திலும் எல்லைமீறிய வசனம் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனால் சென்சார் போர்ட்டில் நிச்சயம் சில கட் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படியென்றால் இப்படத்தின் கின்னஸ் சாதனை அடிப்படும் என்றும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.