ஐடி ரைட்-ல் லைக்கா!! வாய்விட்டு மாட்டிக்கொண்ட பார்த்திபன்

Parthiban Lyca Ponniyin Selvan: I R. Parthiban Ponniyin Selvan 2
By Edward May 16, 2023 06:44 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல பெரிய நடிகர்கள் படங்கள் உட்பட பல படங்களை தயாரித்து மிகப்பெரிய இடத்தினை பெற்று வரும் நிறுவனம் லைக்கா. சமீபத்தில் லைக்கா நிறுவனம் பல கோடி செலவில் பொன்னியின் செல்வன் படத்தினை தயாரித்து வெளியிட்டது.

முதல் பாகம் 500 கோடிக்கும் மேல் வசூலித்த நிலையில் இரண்டாம் பாகம் 335 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தது. இந்நிலையில், லைக்கா நிறுவனம் தொடர்புடைய 8க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஐடி ரைடில் பணபரிவர்த்தனை தொடர்பாக சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ லான்சின் போது நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் மேடையில் பேசிய ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சின்ன பழுவேட்டரையராக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள பார்த்திபன் அந்நிகழ்ச்சியில், வைரல்-ன்னா இப்போது இன்கம் டாக்ஸ் ரைட் தான் நியாபகம் வருகிறது.

1000 கோடி ரூபாயை நீங்கள் ரைட் பண்ண நினைத்தால் பொன்னியின் செல்வன் படத்தின் திரையரங்கு சென்று பார்த்தால் தெரியும், இந்த வாரத்தில் 1000 வசூல் படமாக இருக்கும் என்று கூறியிருந்தார். தற்போது அன்றே கணித்த பார்த்திபன் என்று நெட்டிசன்கள் அந்த வீடியோவை வைரலாக்கி கலாய்த்து வருகிறார்கள்.