இரவு நேரத்தில் நடிகையின் வீட்டுக்கு சென்ற நபர்கள்.. தயாரிப்பாளரிடம் மாட்டிக்கொடுத்த வேலைக்காரர்...
தமிழ் சினிமாவில் நிமிர்ந்து நில், என்னை அறிந்தால் உள்ளிட்ட ஒரு சில தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பார்வது நாயர். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் பார்வது நாயரின் வீட்டில் திருடு போய்விட்டது என்று புகாரளித்திருந்தார்.
ஒன்றரை லட்சம் மதிப்பில் இரு கைக்காடிகாரங்கள் மற்றும் மணிக்கண்னி போன்ற பொருட்களை தன் வீட்டில் வேலை செய்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் எடுத்துவிட்டார் என்று பார்வதி நாயர் போலிசாரிடம் புகாரளித்துள்ளார். இதுகுறித்து சுபாஷ் தனியார் ஊடகத்திற்கு பேட்டிகொடுத்துள்ளார்.
ஒரு நிறுவனத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் நான் ஓய்வு நேரங்களில் பார்வது நாயர் விட்டில் வேலை செய்து வருகிறேன் என்றும் தாயாரிப்பாளர் ஒருவர் பார்வதி நாயர் வீட்டில் நடப்பது பற்றி தெரிந்து கொள்ள என்னை அங்கு அனுப்பி வைத்தார் என்று கூறியுள்ளார்.
அப்படி இரவு நேரத்தில் அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் வந்திருந்ததை தயாரிப்பாளரிடம் நான் கூறிவிட்டேன் என்று தான் இந்த புகாரை அளித்திருக்கிறார் பார்வதி நாயர் என்றும் என் மீது எச்சிலையும் துப்பி இருக்கிறார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து இருவரையும் போலிசார் விசாரித்து வருகிறார்கள்.