அதை வாழ்க்கையில் மறைப்பதில்லை.. பார்வதி இப்படி ஓப்பனாக சொல்லிட்டாரு!
பார்வதி திருவோத்து
பூ , மரியான், உத்தமவில்லன், பெங்களூர் டேஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி திருவோத்து. இவர் மலையாள சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
சமீபத்தில், இவர் நடிப்பில் உள்ளொழுக்கு மற்றும் தங்கலான் ஆகிய படங்கள் வெளி வந்தன. பார்வதி அவ்வப்போது பேட்டிகளில் ஓப்பனாக பேசும் பல விஷயங்கள் பெரிய சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறது.

ஓப்பனாக சொல்லிட்டாரு!
இது குறித்து பார்வதி பேசிய விஷயம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " வாழ்க்கையில் எதுவேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கும். அதற்காக உள்ளதை மறைத்து வாழ்வதில் பிரயோஜனம் இல்லை. என்னை பொறுத்தவரை என் மனதில் என்ன உள்ளதோ, அதை மறைக்காமல் பேசிவிடுவேன்.
அதுதான் நல்லது. நல்லவராக காட்டிக்கொள்வதைவிட, நடிக்காமல் இருப்பது எவ்வளவோ மேல். அந்த போலி முகமூடி எனக்கு தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.
