குண்டாக இருந்தேன் அதற்கு.. மனைவியிடம் ரோபோ ஷங்கர் இப்படி சொன்னாரா?

Tamil Cinema Robo Shankar Tamil Actors
By Bhavya Nov 04, 2025 06:30 AM GMT
Report

ரோபோ ஷங்கர்

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் சின்னத்திரை பக்கம் வந்து மக்களை கவர்ந்தவர் ரோபோ ஷங்கர். சிரிக்கவே மறந்த பலரை சிரிக்க வைத்த ரோபோ ஷங்கர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

அந்த வகையில், கலக்கப்போவது யாரு, அது இது எது என பல நிகழ்ச்சிகளில் ஓய்வே இல்லாமல் கலந்துகொண்டு வந்தார். அவரின் திறமை கண்டு வெள்ளித்திரை அழைக்க அதிலும் ஒரு வலம் வந்தார்.

குண்டாக இருந்தேன் அதற்கு.. மனைவியிடம் ரோபோ ஷங்கர் இப்படி சொன்னாரா? | Robo Shankar Wife Proud Of Her Husband

அஜித், விஜய், தனுஷ் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் படங்கள் நடித்து அசத்தினார். இவ்வாறு மக்களை சிரிக்க வைத்த ரோபோ உடல் நல குறைவால் திடீரென உயிரிழந்தார். இவருடைய மறைவு அவரது மனைவி பிரியங்காவை நிலைகுலைய வைத்தது.

இப்படி சொன்னாரா?  

இந்நிலையில், நிகழ்ச்சியில் பிரியங்கா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், " நான் ஒரு டான்ஸர். ஆனால் குண்டாக இருந்தேன். எனவே எனது அப்பா, அம்மா, நண்பர்கள் எல்லாம் நீ நல்ல டான்ஸர். ஆனால் குண்டாக இருக்கியே என்று திட்டுவார்கள்.

என்னை வெயிட் குறைக்கக்கூடாது என்று சொன்னவர் என்றால் அது ரோபோ சங்கர்தான். அவர் என்னிடம் இதுதான் உனக்கு அழகு. நீ இப்படியே இரு. யார் என்ன சொன்னாலும் கவலைப்படமாட்டேன்.

நீ இப்படி இருந்தால்தான் எனக்கு பிடிக்கும் என சொல்லி என்னை வர்ணித்து கொஞ்சியவர் அந்த மனிதர்தான்" என்று தெரிவித்துள்ளார். 

குண்டாக இருந்தேன் அதற்கு.. மனைவியிடம் ரோபோ ஷங்கர் இப்படி சொன்னாரா? | Robo Shankar Wife Proud Of Her Husband