டேட்டிங் ஆப்பில் காதல்.. பிரேக் அப் ஆக இதன் காரணம்!! தனுஷ் பட நடிகை ஓப்பன் டாக்..
பார்வதி
மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை பார்வதி, நடிகர் தனுஷின் மரியான் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த பார்வதி, விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
அவர் அளித்த பெட்டியொன்றில் காதல் முறிவு குறித்து பகிர்ந்துள்ளார். அதில், தான் டேட்டிங் ஆப்பில் உறுப்பினராக இருப்பதாகவும் அந்த ஆப்பில் நல்ல நபர்கள் இருக்கிறார்களா என்று பார்ப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் தனக்கு நேரில் பார்த்து பழகி, பின் வரும் காதல் மீது தான் அதிக நம்பிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் சினிமாத்துறையிலேயே நல்ல பையன் கிடைத்தால் நன்றாக இருக்கும். முன்பு ஒரு நபரை காதலித்தேன். ஆனால் தன் முன் கோபத்தால் அந்த காதல் பிரேக்கப் ஆனது. சிறிய விஷயத்துக்கு கூட தான் அதிகமாக கோபப்படுவேன்.
சமீபத்தில் தன் முன்னாள் காதலரை சந்தித்தாகவும், இருவரும் நல்ல நண்பர்களாக இருப்பதாகவும் காதல் முறிவு கொடுத்த வலியால் இனி காதலில் விழுவதற்கு முன் பலமுறை யோசித்தே செயல்பட வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக பார்வதி தெரிவித்துள்ளார்.