பீர் பாட்டிலை எடுத்து போடுங்க! பேட்டியில் கால்பந்து வீரரின் செயலின் வைரல் வீடியோ...

Cristiano Ronaldo paul pogba EURO2020 Coca Cola
By Edward Jun 17, 2021 12:00 AM GMT
Edward

Edward

Report

உலகம் முழுவதும் ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்த யூரோ கால்பந்து கோப்பை போட்டி சமீபத்தில் ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தன்முன் வைத்திருந்த கோகோ கோலா பாட்டிலை அகற்றிவிட்டு பேட்டி கொடுத்தார்.

அதேபோன்று பிரான்ஸ் நட்சத்திர கால்பந்து வீரர் பால் போக்பா போட்டி முடிந்து பேட்டியளித்திருந்தார். அப்போது தன் முன் வைத்திருந்த பிரபல நிறுவனத்தில் பீர் பாட்டிலை எடுத்து கீழே வைத்துள்ளார். அதை அகற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.

ஏனென்றால் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் வீரர் பால் போக்பா மதுவுக்கு எதிரானவர் என்பதால் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது யூரோ கோப்பை ஸ்பான்ஸ்ர் நிறுவனமான ஹனிக்கன் பீர் நிறுவனத்தின் பீர் பாட்டிலை எடுத்து வைத்துள்ளாராம். இது தற்போது வைரலாகி பேசும் பொருளாக மாறியுள்ளது.