திருமண கோலத்தில் நடிகை பாவனி - அமீர்!! ரசிகர்கள் ஷாக் கொடுத்த புகைப்படங்கள்..
தெலுங்கு தொலைக்காட்சி சீரியலில் நடித்து தமிழில் ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி, ராசாத்தி போன்ற சீரியல் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி. பிரதீப் குமார் என்பவரை திருமணம் செய்தார்.
திருமணமாகி ஒரு வருடத்திற்குள் பிரதீப் குமார் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார். அதன்பின் அதிலிருந்து மீண்டு, திரும்பவும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்ட பாவனி 2வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.
நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் எண்ட்ரியாக நடன கலைஞர் அமீருடன் காதலில் இருந்தார். நிகழ்ச்சிக்கு பின் தன் காதலை ஏற்காமல் இருந்த பாவனி பிக்பாஸ் ஜோடிகல் 2 சீசனில் தான் தன் காதலை வெளிப்படுத்தினார். அதிலிருந்து இருவரும் ஜோடியாக வெளியில் சுற்றி வந்தனர்.
சமீபத்தில் பாவனி தோல் பட்டையில் ஏற்பட்ட பிரச்சனையால் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் பாவனி அமீருடன் திருமண கோலத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அமீரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூற அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து I Feel the whole zoo when I’am with you. Love you my bubu என்று கூறி வாழ்த்து கூறியுள்ளார்.
திருமண கோலத்தில் எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.