அமீரை காதலிக்கும் நடிகை பாவனியின் முதல் கணவர் இவர் தான்!! வைரலாகும் புகைப்படம்
தெலுங்கு சின்னத்திரையில் சீரியல் நடிகையாக இருந்து தமிழில், ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி, ராசாத்தி உள்ளிட்ட சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் பாவனி ரெட்டி.
ஸ்டார் விஜய்யில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனி, வைல்ட் கார்ட் மூலம் எண்ட்ரி கொடுத்த அமீரை காதலித்தார். நிகழ்ச்சிக்கு பின்பும் இருவரும் காதல் தொடர்பில் இருந்து விரைவில் திருமணமும் செய்யவுள்ளனர்.
ரகசியமாக இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியது.
தற்போது பாவனியின் சோசியல் மீடியா பக்கம் ஒன்றில் ரசிகர் ஒருவர், அக்கா உங்களுக்கும் அமீர் அண்ணனுக்கும் கல்யாணமாகிவிட்டதை அதிகாரப்பூர்வமாக ஏன் கூறவில்லை என்று கேட்டுள்ளார்.
அதற்கு நடிகை பாவனி, நான் கடந்த மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினீர்கள், அதன்பின் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறினார்கள். தற்போது ரகசிய திருமணம் செய்துவிட்டதாகவும் கூறி வருகிறார்கள், அடுத்து என்ன என்று பாவனி பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை பாவனியின் மறைந்த முதல் கணவருடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பாவனி தெலுங்கு நடிகர் பிரதீப் என்பவரை திருமணம் செய்திருந்தார்.
சில பிரச்சனையால் பிரதீப் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து மீண்டு வந்த பாவனி தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து அதன்பின் அமீரை காதலித்து திருமணமும் செய்யவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


