நிகழ்ச்சிக்கு ஆண் நண்பருடன் கைகோர்த்து ஷாக் கொடுத்த குக்வித் கோமாளி பவி! அதிர்ச்சியில் புகழ் ரசிகர்கள்..
தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் தற்போது பெரிய ஹிட் கொடுத்து பேசப்படும் நிகழ்ச்சிகளில் இருப்பது குக் வித் கோமாளில். போட்டியாளர்களும் கோமாளிகளும் போடும் அட்டகாசத்தால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக வளம் வருகிறது இந்நிகழ்ச்சி.
அதில் மிகவும் பெரிய ஹிட்டாக பேசப்படும் இந்த சீசனில் கோமாளி புகழும் நடிகை பவித்ராவின் ரொமாண்டிக் காட்சிகள் இளைஞர்கள் மத்தில் ஆழமாக பதிந்து வருகிறது. இந்நிலையில் இறுதி கட்டத்தில் இருக்கும் இந்த சீசனில் இறுதி சுற்றிற்காக போட்டியாளகளும் கோமாளிகளும் ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.
தற்போது வருகிற நிகழ்ச்சியில் நடிகை பவித்ரா ஆண் ஒருவருடன் எண்ட்ரி கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. பவித்ராவிற்கு அவர் நண்பரா இல்லை காதலரா என்று புகழ் ரசிகர்கள் இணையத்தில் விடாமல் ஷாக்காகி கேள்விகள் கேட்டு வருகிறார்கள். இதற்கு பவியுடன் வந்த நண்பர் பல பேட்டிகள் கொடுத்து பிரபலமாகி வருகிறார்.