புகழ் இல்லனா நா இல்ல! கண்ணீர் விட வைத்த குக் வித் கோமாளி நடிகை பவித்ரா!

comali pavithira pugazh
By Jon Mar 16, 2021 05:22 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவது குக் வித் கோமாளி. கோமாளிகளாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சரத் உள்ளிட்டவர்களின் காமெடிகள் நம்மை குளுங்க குளுங்க சிரிக்க வைத்து வருகிறார்கள். இந்த வாரம் எலிமினேஷனில் அஷ்வின், பவித்ரா இருவரில் யார் வெளியேறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருந்தது.

அந்தவகையில் கடந்த வாரம் ஞாயிறு அன்று பவித்ரா நிகழ்ச்சியை விட்டு எலிமினேஷன் செய்யப்பட்டு விடைபெற்றார். விடை பெற்ற சோகத்தில் பவித்ராவிடம் குக் வெங்கடேஷ் பட் அனுபவத்தை பற்றி கேட்டார். அதற்கு பவித்ரா, முதல் நிகழ்ச்சிக்கு வந்த போது என்னை யாருக்கும் தெரியாது என் பெயர் தெரிய காரணம் புகழ் தான்.

அவர் இல்லை என்றால் நான் இல்லை இதை எங்கும் மாற்றி கூறமாட்டேன், நாங்கள் ஒரே குடுமபத்தை சார்ந்தவர்கள் என்று கூறினார். அதற்கு புகழ் கூறியது, இதை பார்த்து ரொம்ப ஃபீல் பண்றேன். ஒருவரை யாராலும் பெருமையாய் பேசுவது கூறுவது யாராலும் முடியாது. என்னதான் பெரிய ஆளானாலும் அவனால் தான் என்று மற்றவர்களை கூறுவது கிடையாது என்று அழது கொண்டே கூறி நெகிச்சி படவைத்துள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, புகழ் பவித்ரா பேசிய வீடியோ..