இறுக்கி கட்டியணைத்து லவ் யூ சொன்ன நடிகை பாவ்னி! தலைக்கால் புரியாமல் ஆடும் பிக்பாஸ் அமீர்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பான சின்ன தம்பி சீரியல் மூலம் பிரபலமானவர் சீரியல் நடிகை பாவ்னி ரெட்டி. தெலுங்கு சின்னத்திரை நடிகையாக நடித்து பின் தமிழில் நல்ல வரவேற்பு பெற்று நடித்து வந்தார். ஏற்கனவே ஒரு திருமணம் செய்து கணவர் இறந்த நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்தார் பாவ்னி.
இதன்பின் பிக்பாஸ் 5 சீசன் வாய்ப்பு கிடைத்து அதில் போட்டியாளராக பங்கேற்றார். இறுதி வரை நிகழ்ச்சியில் நீடித்து மக்கள் மனதை ஈர்த்து வந்தார். நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் எண்ட்ரி கொடுத்த நடன கலைஞர் அமீருடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கியும் வந்தார்.
நிகழ்ச்சிக்கு பின் இருவரும்நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியில் செல்வதுமாக இருந்த புகைப்படங்கள் வைரலானது. ஆனால் இதுவரை பாவ்னி அமீரை காதலிப்பதாக ஒப்புக்கொண்டு காதலை வெளிப்படுத்தாமல் இருந்து வருகிறார்.
பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி வரும் பாவ்னி-அமீர் இருவரும் எப்போது காதலை வெளிப்படுத்துவீர்கள் என்றெல்லாம் ரசிகர்களிடமிருந்து கேள்வியாக எழுந்து வந்தது. இந்நிலையில் அமீரின் பிறந்தநாளன்று இறுக்கி கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார் பாவ்னி ரெட்டி.
அமீரை புகழ்ந்து தள்ளியதோடு லவ் யூ டா ஹாப்பி பெர்த்ட் டே அமீர் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் காதலை சொல்லியாச்சி கட்டியும் பிடிச்சாச்சு எப்போ கல்யாணம் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.