என்னது பாவ்னி ரெட்டி 35 வயதில் கர்ப்பமா!! வைரலாகும் அமீர் கூறிய வீடியோ...
தெலுங்கு தொலைக்காட்சி சீரியலில் நடித்து தமிழில் ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி, ராசாத்தி போன்ற சீரியல் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி. பிரதீப் குமார் என்பவரை திருமணம் செய்தார். திருமணமாகி ஒரு வருடத்திற்குள் பிரதீப் குமார் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார்.
அதன்பின் அதிலிருந்து மீண்டு, திரும்பவும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்ட பாவனி 2வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார். நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் எண்ட்ரியாக நடன கலைஞர் அமீருடன் காதலில் இருந்தார்.
நிகழ்ச்சிக்கு பின் தன் காதலை ஏற்காமல் இருந்த பாவனி பிக்பாஸ் ஜோடிகள் 2 சீசனில் தான் தன் காதலை வெளிப்படுத்தினார். அதிலிருந்து இருவரும் ஜோடியாக வெளியில் சுற்றி வந்தனர். சமீபத்தில் பாவனி தோல் பட்டையில் ஏற்பட்ட பிரச்சனையால் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் பாவனி ஒரு விண்ணப்பத்தை ஃபில் பண்ணும் போது நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்ற கேள்வி இருந்துள்ளது. அதை படித்த பாவ்னியிடம், ஆமாம் என்று அமீர் கூறியுள்ளார்.
உடனே ஷாக்கான பாவனி ஏன் அமீர், அது இப்போது இல்லை, 5 வருடத்திற்கு பின் தானே கல்யாணம் பண்ணிக்க போறோம் என்று பாவனி தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் 'ஏற்கனவே 35 வயசாகிடுச்சி, இன்னும் 5 வருஷம்னா 60 வருஷத்துக்கு பின் கர்ப்பமாகு' என்று கலாய்த்து வருகிறார்கள்.
