அடிக்கடி காதலில் விழுந்து 3 கல்யாணம் செய்த பவன் கல்யாண்!! ரஷ்ய நடிகையை 3வது மனைவியாக்கிய கதை..
தெலுங்கு சினிமாத்துறையில் டாப் நடிகராகவும் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று கொண்டாடப்பட்டு வருபவருமான பவன் கல்யாணின் மூன்றாம் திருமணம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. தெலுங்கில் ஜன சேனா கட்சியின் தலைவராக வெற்றி பெற்று கொண்டாடிய தன் கணவரை, மூன்றாவது மனைவி அன்னா லேஷ்னேவா வரவேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே விவாகரத்து பெற்ற அன்னா லேஷ்னேவாவுக்கு, பொலேனா அஞ்சனா பவோனோவா என்ற மகள் இருக்கிறார். பவன் கல்யாண் தன் மூன்று குழந்தைகளையும் சேர்ந்து அன்னாவின் மகளையும் வளர்த்து வருகிறார். இரு ஆண்டுகள் அன்னாவை டேட்டிங் செய்து 2013ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2017ல் மார்க் ஷங்கர் பவோனோவிச் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
ரஷ்ய மாடல் நடிகையான அன்னா லெஷேவா, பவன் கல்யாணை 2011ல் தீன் மா என்ற படத்தின் ஷூட்டிங்கில் சந்தித்து பழகி இருக்கிறார். அதன்பின் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். பவன் கல்யாண் 1997ல் நந்தினியை திருமணம் செய்து 2008ல் விவாகரத்து செய்தார்.
அதன்பின் நடிகை ரேணு தேசாயுடன் காதல் ஏற்பட்டு 2009ல் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் நடிகை ரேணு இரு குழந்தைகளின் படிப்பு வளர்ப்புகளில் கவனம் செலுத்தி வந்தார். விவாகரத்துக்கு பின் நடிகை ரேணு தேசாய், கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து குழந்தைகளின் படிப்பு வளர்ப்புகளில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது நான் சுதந்திரமாக இருப்பேன், திருமணத்தை அனுபவிக்க முடியும், அதனால் தான் இத்தனை ஆண்டுகளாக காத்திருக்கிறேன். கண்டிப்பாக 2. 3 ஆண்டுகளில் திருமணம் செய்து கொள்வேன், எனக்கு திருமண வாழ்க்கை வேண்டும், எல்லா தாம்பத்திய வாழ்க்கையையும் அனுபவிக்க விரும்புவதாகவும் நடிகை ரேனு தேசாய் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.