குடும்பத்த பிரிச்சவ ஸ்ரீதேவின்னு பேசுனாங்க..ஆனா!! மகள் ஜான்வி கபூர் வேதனை..
ஸ்ரீதேவி
இந்திய சினிமாவில் பல மொழிப்படங்களில் நடித்து டாப் நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமான ஸ்ரீதேவி, கடந்த 2018ல் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஹோட்டலில் அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

அவரின் இறப்பு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தநிலையில், ஸ்ரீதேவி மரணம் குறித்த மர்மம் இன்றுவரை புரியாத புதிராக இருந்து வருகிறது. பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வரும் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், தற்போது தென்னிந்திய படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

ஜான்வி கபூர்
இந்நிலையில் ஜான்வி கபூர் அளித்த பேட்டியொன்றில், குடும்பத்தை பிரிச்சவ என்று எங்கள் அம்மாவை மோசமாக பேசினார்கள். ஆனால் அம்மா இறந்தப்பின் அவரை பற்றி நல்லவிதமாக பேசினார்கள்.
இருப்பினும் குடும்பத்தை பிரித்த பட்டம், விமர்சனங்களால் அம்மாவுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியது என வேதனையுடன் ஜான்வி கபூர் தெரிவித்திருக்கிறார்.