லவ்வுன்னு சொல்லி நிறையபேர் டார்ச்சர் பண்றாங்க!! எக்ஸ்களுக்கு பதிலடி கொடுத்த அமலா பால்
அமலா பால்
தமிழில் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று பிரபலமடைந்தவர் நடிகை அமலா பால். அப்பட வெற்றியால் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா ஆகியோர் படங்களில் நடித்தார்.
தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். முன்னணி நாயகியாக இருந்தபோதே இயக்குநர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றார். அதற்கு பின், ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணமும் செய்து ஒரு மகனை பெற்றெடுத்தார்.
லவ்வுன்னு சொல்லி
சமீபத்தில் நடந்த விருது விழாவில் கலந்து கொண்ட அமலா பால், திருமண நாளில் பகிர்ந்த பதிவிற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதில், நிறைய பேர் நம்மல லவ்வுன்னு சொல்லி ஏமாத்துறாங்க, இல்லையா. லவ் ஒரு மிஸ்யூஸ் பண்ற ஒரு வார்த்தை. லவ்வுன்னு சொல்லி நிறைய டார்ச்சர் பண்றாங்க, லவ்வை எப்படி டாக்ஸிக் பண்ணமுடியும் என்பதுதான் இங்கே நடந்துட்டு இருக்கு.
இதுதான் லவ்-ஆ, இப்படியொரு காதல் இருக்குமா? எனக்கு நானா இருக்க முடியுமா என்று யோசித்தேன் கூறி தான் எக்ஸ்களுக்கு பதிலடி கொடுத்தேன் என்று அமலா பால் தெரிவித்துள்ளார்.