ஓசியில் படம் பார்த்துவிட்டு விமர்சிக்க கூடாது.. பயில்வானை மறைமுகமாக திட்டிய பிரபல இயக்குனர்..
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் பேரரசு. விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களை இயக்கின் மாஸ் நடிகர் விஜய் என்று அடிதளப்போட்டவர் பேரரசு. அதன்பின் அவர் இயக்கத்தில் எடுத்த படங்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றது.
சமீபத்தில் கூட விஜய்க்காக இரு கதைகளை வைத்திருக்கிறேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், பேரரசு ப்ளூ சட்டை என்ற குறும்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில், 10 வருஷமாக உதவி இயக்குனராக நான் கஷ்டப்பட்டேன். இயக்குனர் ஆவதற்கு 5 வருடங்களும் ஆனது.
15 வருடமாக ஊருக்கு கூட போகமுடியவில்லை. அப்படியிருக்கும் இயக்குனர் பல கஷ்டங்களை தாண்டி ஒரு படத்தை வெளியிட்டால் அதை கடுமையாக தாக்கி வா, போ என்று தரக்குறைவாக பேசி எழுதுவது மனதை காயப்படுத்தினால் இயக்குனர்கள் மன எப்படி பாடுபடும்.
கடுமையான சொல்லை பயன்படுத்தி விமர்சிப்பவர்கள் தன் காசில் படம் பார்த்து எழுத வேண்டுமே தவிர ஓசியில் படம் பார்த்து எழுதக்கூடாது என்று கடுமையாக பேசியுள்ளார்.
இதற்கு பயில்வான் என் காசில் தான் நான் விமர்சனம் செய்கிறேன். காசு கொடுத்து படத்தின் விமர்சனங்களை பேச வைக்கக்கூடாது தயாரிப்பாளர்கள் என்றும் கூறி சர்ச்சையாக பேசியிருந்தார்.