ப்ளூ சட்டை மாறன் ஒரு பைத்தியம்.. மோசமாக திட்டிய இயக்குனர்

Blue Sattai Maran
By Parthiban.A Oct 04, 2022 03:43 PM GMT
Report

வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் ஒரு விழாவில் பேசும்போது ராஜராஜ சோழன் ஹிந்து மன்னனா என கேட்டு கோபமாக பேசி இருந்தார்.

அவருக்கு ஆதரவாக சீமான் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

ப்ளூ சட்டை மாறன் ஒரு பைத்தியம்.. மோசமாக திட்டிய இயக்குனர் | Perarasu Slam Vetrimaaran And Blue Sattai

இயக்குனர் பேரரசு பதிலடி

இந்நிலையில் வெற்றிமாறனுக்கு இயக்குனர் பேரரசு பதிலடி கொடுத்து இருக்கிறார். "கடவுள் இல்லை என சொல்லும் நீங்கள் ஏன் மதம் பற்றி கருத்து கூறுகிறீர்கள். நீங்கள் எல்லாம் மனிதனே இல்லை" என பேரரசு கூறி இருக்கிறார்.

அடுத்து ப்ளூ சட்டை மாறன் பற்றி பேசிய அவர் 'இவரும் ஒரு மனநோயாளி. படத்தை விமர்சனம் செய்ய அவருக்கு தகுதியே இல்லை. அவரது ஆன்டி இண்டியன் படத்தை 2ம் பாகம் எடுக்க சொல்லுங்க' என மோசமாக தாக்கி பேசி இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் விமர்சனம் செய்த ப்ளூ சட்டை பற்றி தான் அவர் இப்படி பேசி இருக்கிறார்.